கோவையில் மோசடி நிறுவனத்திற்கு போலீஸ் துணைபோவதாக முன்னாள் ராணுவ வீரர்கள் புகார்
கோயம்புத்தூரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட டிஎஸ்பி ஒருவர் மோசடி செய்த நிறுவனத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக கோவை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசாரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் முன்னாள் ராணுவ வீரர்கள் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்
Next Story
