தமிழகம் வருகிறது வாஜ்பாய் அஸ்தி : 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, இன்று சென்னை கொண்டு வரப்பட்டு கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது.
தமிழகம் வருகிறது வாஜ்பாய் அஸ்தி : 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு
Published on

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி, இன்று சென்னை கொண்டு வரப்பட்டு கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது. இது குறித்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை ஒன்பதரை மணியளவில், வாஜ்பாயி அஸ்தியை, டெல்லியில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக் கொள்வார் என கூறப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்று மாலை நான்கரை மணிக்கு கொண்டு வரப்படும் அஸ்தி கலசத்துடன், விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் ஊர்வலம் நடைபெறும் என பாஜக தெரிவித்துள்ளது. பின்னர், 23ம் தேதி, பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாயி அஸ்தி கலசம் வைக்கப்படும் எனவும் இதனையடுத்து சென்னை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, திருச்சி, ஈரோடு ஆகிய 6 இடங்களுக்கு ஊர்வலமாக அஸ்தி கொண்டு செல்லப்பட்டு ஆறுகளில் கரைக்கப்படும் என பாஜக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com