Tiruvannamalai Temple || ரூ.5 கோடி சொத்தை கோயில் உண்டியலில் போட்ட Ex மிலிட்டரி
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே படவேடு அருள்மிகு ஸ்ரீ ரேணுகாம்பாள் அம்மன் கோவில் உண்டியலில் முன்னாள் ராணுவ வீரர் விஜயன் என்பவர் கோயில் உண்டியலில் தான் சம்பாதித்த 5 கோடி மதிப்பிலான மூன்று வீட்டு பாத்திரத்தை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளார்
தனது மனைவி கஸ்தூரி மற்றும் மைத்துனர்கள் ஆகியோர் கோவில் உண்டியலில் சொத்து பத்திரத்தை காணிக்கையாக செலுத்தியதால் தனக்கு மிரட்டல் விடுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ராணுவ வீரர் விஜயன் என்பவருக்கு மனைவி கஸ்தூரி மற்றும் சுபலட்சுமி ராஜலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
தற்போது இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவில் ஆய்வாளர் சிலம்பரசன் தலைமையில் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை என்னும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் உண்டியலில் விஜயன் அவர்கள் காணிக்கையாக செலுத்திய வீட்டு பத்திரமும் உள்ளதால் பரபரப்பு.
கோவில் உண்டியல் என்னும் இடத்தில் விஜயன் மனைவி மகள்கள் குடும்பத்துடன் தங்கள் சொத்து எங்களுக்கு வேண்டும் என்ற மனநிலையில் காத்துக் கிடப்பதால் பரபரப்பு.
சொத்து பத்திரம் கோவிலுக்கு சேர வேண்டும் என்று பக்தர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்
குடும்பத்தினர் கோவில் அருகில் உண்டியல் என்னும் இடத்தில் காத்துக் கிடப்பது மேலும் பரபரப்பை கூட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
