குடிசையில் வாழ்ந்த முன்னாள் HM - தேடி வந்து புது வீடு கட்டி கொடுத்த மாணவர்கள்
குடிசையில் வாழ்ந்த முன்னாள் தலைமை ஆசிரியை - விசயம் தெரிந்து தேடி வந்து புது வீடு கட்டி கொடுத்த மாணவர்கள்
கடலூர் மாவட்டம், புவனகிரியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியைக்கு, முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து வீடு கட்டி கொடுத்த நிகழ்வு நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதாகும் ஆசிரியை சந்திரா 1981ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 ஆண்டுகள் அப்பள்ளியில் பணிபுரிந்து வந்த காலத்திலும், தற்போது ஓய்வு பெற்றுள்ள காலத்திலும் குடிசை வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இதனையறிந்து அவரிடம் பயின்ற மாணவர்கள், சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடு ஒன்றை கட்டி கொடுத்துள்ளனர்.
Next Story
