Police theft | சென்னையில் முன்னாள் காவலர் செய்த காரியம் - CCTVயை பார்த்து அதிர்ந்து போன போலீஸ்

x

சென்னை கீழ்பாக்கத்தில் ஹவாலா பணம் திருடிய வழக்கில் முன்னாள் காவலர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், முன்னாள் காவலர் மணிகண்டன், கணேஷ்குமார், பாலகிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஏடிஎம் மெசினில் ஹவாலா பணங்களை நிரப்பச் செல்பவர்களை குறிவைத்து திருட்டு நடத்துவதாகவும், சட்டத்திற்கு புறம்பான பணம் என்பதால் யாரும் புகார் அளிக்க மாட்டார்கள் என்பதால் திருடியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், பணத்தை இழந்த மைனர் அலி, 3 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை வண்டியில் வைத்திருந்த நிலையில், வண்டியுடன் சேர்த்து திருடிச் சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்