பாதுகாப்புடன் கடலில் விடப்பட்ட 130 ஆமை குஞ்சுகள்...

புதுச்சேரி கடற்கரை பகுதியில் பாதுகாக்கப்பட்ட ஆலிவ் ரெட்லி வகை ஆமை குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டது.
பாதுகாப்புடன் கடலில் விடப்பட்ட 130 ஆமை குஞ்சுகள்...
Published on

புதுச்சேரி கடற்கரை பகுதியில் பாதுகாக்கப்பட்ட ஆலிவ் ரெட்லி வகை ஆமை குஞ்சுகள் கடலில் பாதுகாப்பாக விடப்பட்டது. இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கும் 'ஆலிவ் ரெட்லி' எனும் அரிய வகை ஆமைகள், நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரை பகுதிக்கு வந்து, பள்ளம் தோண்டி முட்டையிட்டு, திரும்பி சென்று விடும். புதுச்சேரி வனத்துறை சார்பில், சேகரித்து, பாதுகாக்கப்பட்ட முட்டைகளில் இருந்து 130 ஆமை குஞ்சுகள் வெளிவந்தன. அவற்றை வனத்துறையினர் பாதுகாப்பாக கடலில் விட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com