சோதனைச் சாவடியில் லஞ்சம் வாங்கிய வனத்துறை அதிகாரி
தென்காசி மாவட்டத்தில், தமிழக கேரள எல்லையில் உள்ள புளியரை சோதனைச் சாவடியில், கனரக வாகன ஓட்டியிடம் வனத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனரக வாகன ஓட்டுநரிடம் வனத்துறை அதிகாரி காட்டமாக பேசுவதும், காவல்துறைக்கு தருவது போன்று, தங்களுக்கும் தரவேண்டும் என்று பேரம் பேசுவதும் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. பணத்தை கொடுத்துவிட்டு கனரக வாகன ஓட்டி செல்லும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
