வெளிநாட்டு ஆசிரியர்களின் சைக்கிள் பேரணி, யோகா கலை குறித்து விழிப்புணர்வு பயணம்

யோகாவை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வெளிநாட்டு ஆசிரியர்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு ஆசிரியர்களின் சைக்கிள் பேரணி, யோகா கலை குறித்து விழிப்புணர்வு பயணம்
Published on
யோகாவை வலியுறுத்தி இந்தியா முழுவதும் வெளிநாட்டு ஆசிரியர்கள் சைக்கிள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். நார்வே நாட்டைச் சேர்ந்த சிவாங்கா, அமெரிக்காவைச் சேர்ந்த ஹனி, வேலூரைச் சேர்ந்த அஜய் மணிராஜ் ஆகியோர், இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இவர்களது பயணம் கிருஷ்ணகிரி வந்தடைந்தது. இரு தினங்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மாணவர்களுக்கு யோகா கலையை பற்றி இந்த குழு எடுத்துரைக்கிறது. அதன்பின் ஒசூர் வழியாக கர்நாடகம் செல்லும் இந்தக் குழுவினர் இமயமலை வரை சென்று அங்குள்ள கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர்வையும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த உள்ளதாகவும் கூறினர்.
X

Thanthi TV
www.thanthitv.com