வளைகுடா நாடுகளில் சிக்கித் தவித்த, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி முயற்சியால் சொந்த ஊர் வந்தடைந்தனர். ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், வளைகுடா நாடுகளில் நான்கு மாதங்களுக்கு மேலாக தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் உள்பட பலர் சிக்கித் தவித்தனர். மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் போதிய விமானம் இல்லாத காரணத்தால், அவர்களை மீட்க முடியாத நிலை நீடித்தது. இந்த நிலையில், நவாஸ் கனி எம்.பி, முயற்சியால், தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு விமானத்தில் அனைவரும் மதுரை வந்தடைந்தனர்.