வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா

பொங்கல் விழாவையொட்டி கொடைக்கானல் சுற்றுலா துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா
Published on
பொங்கல் விழாவையொட்டி கொடைக்கானல் சுற்றுலா துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர். வட்டக்கானல் பகுதியில் நடந்த விழாவில் ஜெர்மன், பிரான்ஸ், இஸ்ரேல், அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60 வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். தமிழர் பாரம்பரியப்படி மாலைகள் அணிவிக்கப்பட்டும் நெற்றியில் திலகம் அணிவித்தும் மேளதாளத்தோடும் வெளிநாட்டினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெளிநாட்டினர் பொங்கல் வைத்தனர். பின்னர் சிலம்பாட்டம், பரதநாட்டியம், புலியாட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் உற்சாகமாக ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com