திருமணத்திற்கு வற்புறுத்தல் - கல்லூரி மாணவி விபரீத முடிவு

x

திருமணத்திற்கு வற்புறுத்தல் - கல்லூரி மாணவி விபரீத முடிவு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருமணத்திற்கு வற்புறுத்தியதால்,19 வயது கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரசிங்கம்பேட்டையைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற மாணவி தனியார் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரை, ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உடன் வாழ்ந்து வரும் குணசேகரன் என்பவர் திருமணம் செய்ய வற்புறுத்தி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான புவனேஸ்வரி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன் மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குணசேகரனை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்