

பிரபல ஆங்கில பத்திரிகையான ஃபோர்ப்ஸ் ஆண்டுதோறும் மக்களை கவர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை பட்டியலிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அவரை தொடர்ந்து, பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், சல்மான்கான், அமிதாப்பச்சன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளனர். 5 வது இடத்தில் தோனி உள்ளார். தமிழக பிரபலங்களை பொறுத்தவரை 13 வது இடத்தை ரஜினி காந்தும், 16 வது இடத்தை ஏ.ஆர் ரகுமானும் பெற்றுள்ளனர். இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய்க்கு 47 வது இடமும், நடிகர் அஜித்குமாருக்கு 52 வது இடமும் இயக்குநர் ஷங்கருக்கு 55 வது இடமும் வழங்கப்பட்டுள்ளது. அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் கமல் 56 , நடிகர் தனுஷ் 64, இயக்குநர் சிவா 80, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 84 ஆகிய இடங்களை கைப்பற்றியுள்ளனர்.