

"ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படவில்லை"
ஈரோடு மாவட்டத்தில் சூரம்பட்டி அருகே உள்ள மீன் சந்தையில், மீன்வளத் துறை ஆய்வாளர் சசிகலா, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கலைவாணி ஆகியோர் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது, பார்மலின் ரசாயனம் கொண்டு மீன்கள் பதப்படுத்தப்பட்டுள்ளதா, என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. அதே சமயம் பார்மலின் கொண்டு மீன்களை, பதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.