ஓமலூரில் இயற்கை மற்றும் சிறுதானிய உணவுகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. இதில் திணை, சாமை, கம்பு, சோளம் உள்ளிட்ட சிறுதானிய வகை உணவுகள் இடம்பெற்றன. இதேபோல கொளுக்கட்டை, கார வடை என பல பாரம்பரிய உணவு பொருட்களும் இந்த கண்காட்சியில் காட்சி படுத்தப்பட்டன. கண்காட்சிக்கு வந்த பார்வையாளர்களுக்கு, இந்த உணவுகளின் பயன்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.