Fog | OOTY | "என்ன ஒரே பனி மூட்டமா இருக்கு.." சிரமத்தில் வாகன ஓட்டிகள்
உதகை அருகே தலைகுந்தா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம். பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு இயக்கினர்.
தமிழகத்தில் நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நேற்று இரவு உதகை, குன்னூர், கோத்தகிரி, போன்ற பகுதிகளில் தொடர் மழை பெய்தது.
குறிப்பாக உதகை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் லேசான சாரல் மழையுடன் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் உதகை அருகே உள்ள தலைக்குந்தா ,பைன் மரக்காடுகள், காமராஜர் சாகர் அணை, HPF, பிங்கர் போஸ்ட்,உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.
சாலையில் வாகனங்கள் செல்வது தெரியாத அளவிற்கு அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு இயக்கப்பட்டன. குளிரும் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
