Tirupathur | பாலாறு முழுக்க குபுகுபுவென பொங்கி வரும் நுரை - இதுதான் காரணமா?
பாலாறு முழுக்க குபுகுபுவென பொங்கி வரும் நுரை - இதுதான் காரணமா?
Tirupathur | பாலாறு முழுக்க குபுகுபுவென பொங்கி வரும் நுரை - இதுதான் காரணமா?
#Tirupathur #flood #thanthitv
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலைக் கழிவுநீரால் நீராதாரங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆம்பூர், வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் மாராப்பட்டு பகுதியில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தோல் தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து கழிவுநீர் ஆற்றில் திறந்துவிடப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆற்று நீர் முழுவதும் நுரை நிரம்பிக் காணப்படுகிறது.
