Kanyakumari | Flowers Rate | எங்கோ எகிறிய பூக்கள் விலை - குமரியில் கிடுகிடு உயர்வு

எங்கோ எகிறிய பூக்கள் விலை - குமரியில் கிடுகிடு உயர்வு

#Kanyakumari #Flowers #FlowersRate #ThanthiTV

Kanyakumari | Flowers Rate | எங்கோ எகிறிய பூக்கள் விலை - குமரியில் கிடுகிடு உயர்வு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலர் சந்தையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பண்டிகைகளையொட்டி பூக்களின் தேவை அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ஆயிரத்து 800 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ரோஜா 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அரளிப்பூ கிலோ 600 ரூபாய்க்கும், சம்பங்கிப்பூ 500 ரூபாய்க்கும், கலர் செவ்வந்தி 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தாமரை ஒன்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று மல்லிகை, பிச்சிப்பூ உள்ளிட்ட பூக்களின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதனால், பூக்கள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலத் தேவையால் தோவாளை மலர் சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com