Sathuragiri Flood| நாலாபுறமும் சுற்றிவளைத்த வெள்ளம் - இந்த பக்கம் போய்டாதீங்க

நாலாபுறமும் சுற்றிவளைத்த வெள்ளம் - இந்த பக்கம் போய்டாதீங்க

#sathuragiriflood #virudhunagarrains

கனமழையால், விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் விடிய விடிய பெய்த கன மழை காரணமாக பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதனால், பத்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று பிரதோஷத்திற்கு பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் கோயிலுக்கு வருகை தந்த சில பக்தர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பினர். மழையையை பொறுத்து நாளை கோயிலுக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com