Hogenakkal | காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

x

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் சதீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரி நீரால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 88 ஆயிரம் கனஅடி நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், கரையோரம் உள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆட்சியர் சதீஸ், காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான முதலைப் பண்ணை, மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை, பரிசல்துறை மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட தண்ணீர் ஏற்றும் நிலையம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்