Valparai | சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்த வெள்ளம்| செல்ஃபி எடுக்க குவிந்த டூரிஸ்ட்கள்
Valparai | TN Rains | சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்த வெள்ளம் | மழையிலும் செல்ஃபி எடுக்க குவிந்த டூரிஸ்ட்கள்
#valparai #TNRains #flood #tourist #thanthitv
சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளை வெளியேற்றிய வனத்துறையினர் தொடர் விடுமுறையை முன்னிட்டு கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், சின்னக்கல்லார் பகுதியில் 123 மில்லிமீட்டர் மழை பதிவானதால், நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. இந்த இயற்கை எழிலை ரசித்த சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அதே நேரத்தில், பாதுகாப்பு கருதி அதிகளவில் திரண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் கட்டுப்படுத்தி, ஆபத்தான பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்தினர்.
