50 வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்.. 2 வது நாளாக செய்வதறியாது தவிக்கும் மக்கள்
குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் - வீடு வழங்க பொதுமக்கள் கோரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடமாக தட்டான்குட்டை ஊராட்சியில் காலி மனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தாங்கள் தினசரி கூலி தொழிலாளர்கள் என்பதால் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடுகள் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
