பாய்ந்து வரும் வெள்ளம் - மக்களுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியில் உள்ளது. இந்த சூழலில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. உபரிநீரை குளங்கள், ஏரிகள் மற்றும் சரபங்கா போன்ற திட்டங்களுக்கு திருப்பிவிட்டு சேமிக்க நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Next Story
