திருச்சியில் 3 மணி நேரம் நின்ற விமானம் - கொந்தளித்த 160 பயணிகள்

திருச்சியில் இருந்து பெங்களூர் வழியாக மும்பைக்கு இண்டிகோ விமானம் இன்று காலை 8.05 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. இதில் 160 பயணிகள் காலை 7.30 மணி அளவில் இண்டிகோ விமானத்தில் அமர்ந்திருந்தனர். விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக 3 மணி நேரத்திற்கு மேலாக விமானம் புறப்படாமல் இருந்ததால் பயணிகள் கூச்சலிட்டு அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

மேலும் திருச்சியில் இருந்து மும்பை வழியே மற்ற நாடுகளுக்கு செல்ல இருந்த பயணிகள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி உற்றனர். இதனை தொடர்ந்து

மும்பை செல்லும் பயணிகள் திருச்சியில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து மும்பை செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com