விமான சீட்டில் ஊசி குத்தியதால் மன உளைச்சல்.. ஒன்றரை லட்சம் இழப்பீடு.?

x

விமானத்தில் விட்டுச் செல்லப்பட்ட ஊசி குத்தி பாதிக்கப்பட்ட சீனாவைச் சேர்ந்த நபர் அந்த சம்பவம் தனக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறி, சீனா சதர்ன் ஏர்லைன்ஸிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Fu என்ற அந்த நபர் விமானத்தின் சீட் பாக்கெட்டுக்குள் வைக்கப்பட்ட தன் போனை எடுக்கும்போது உள்ளே இருந்த பயன்படுத்தப்பட்ட ஊசி அவரது கையை பதம் பார்த்துள்ளது. முன்பு அந்த இருக்கையில் அமர்ந்திருந்த பயணி தவறுதலாக ஊசியை விட்டுச் சென்றது தெரிய வந்த நிலையில், Fu பதட்டத்தால் தூக்கமின்மை ஏற்பட்டு தவித்ததாகக் கூறி விமான நிறுவனத்திடம் இழப்பீடு கோரியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்