"ஜாதியை சொல்லி 5 பேர் கட்டி வச்சு அடிச்சாங்க.." - சிறுவன் அளித்த பகீர் தகவல்

x

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தென்கரைக்கோட்டையை சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்திருக்கும் ராமகிருஷ்ணனுக்கு சொந்தமான நெற்கதிர் அடிக்கும் வண்டியில் ஆறு நாட்கள் மட்டும் வேலை பார்த்துவிட்டு வேலையில் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமக்கிருஷ்ணன் சிறுவனை பங்க் அருகே மரத்தில் கட்டி வைத்து சாதி பெயரை சொல்லி கடுமையாக தாக்கியுள்ளார். தகவலறிந்து வந்த உறவினர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

புகாரை தொடர்ந்து ராமகிருஷ்ணன் உட்பட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்