பொன் ராதாகிருஷ்ணன் மீது மீனவ கிராமத்தினர் புகார்
"கடல் யாருக்கும் சொந்தமில்லை, நாட்டுக்குத்தான் சொந்தம்" என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு எதிராக மீனவ கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
தொல்குடி இனத்தைச் சார்ந்த மீனவர்களின் வாழ்விடங்கள், தொழில் செய்யும் இடங்கள், கடல் மற்றும் கடற்கரை மீனவர்களுக்குச் சொந்தமில்லை என்று கூறியதுடன், மீனவ மக்களிடையே பிரிவுகளை ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, பொன் ராதாகிருஷ்ணன் பேசியதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story
