சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்

சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.
சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் வேலை நிறுத்தம்
Published on
கடலூர் அருகே சுருக்கு வலைகள் பறிமுதல் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் மீன்பிடி தடைகாலம் 15-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், கடலூர் முதுநகர் சோதனை சாவடி அருகே லாரி ஒன்றை மடக்கி போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சுருக்கு வலை மற்றும் லாரியயை பறிமுதல் செய்தனர். இதேபோல் 5 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை கண்டித்து கடலூர் மாவட்ட மீனவ கிராமங்களில் காலவரையற்ற போராட்டத்தை மீனவர்கள் தொடங்கியுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com