Fishermen Issue | ``இரு நாடுகள் பிரச்சனை இல்ல; ஒரு வீட்டு பிரச்சனை’’ - இலங்கை அமைச்சர் பேச்சு
"இந்தியா-இலங்கை மீனவர் பிரச்சனையை தீர்க்க இலங்கை அரசு தயார்"
இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு இலங்கை அரசு துணை நிற்கும் என்று, அந்நாட்டு அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் தெரிவித்துள்ளார். அரசு முறை பயணமாக தமிழகம் வந்துள்ள அவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இலங்கையில் போர் பதற்றம் காரணமாக அகதிகளாக சென்றவர்களை மீண்டும் வரவேற்க இலங்கை அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story
