இஸ்ரோ செயலியை பயன்படுத்தி மீனவர்கள் பயனடைய வேண்டும் - இஸ்ரோ இயக்குநர் பாண்டியன்

ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா போல விண்வெளியில் சாதனை நிகழ்த்த வரவேண்டும் என மாணவ, மாணவிகளுக்கு இஸ்ரோ இயக்குநர் பாண்டியன் அழைப்பு.
இஸ்ரோ செயலியை பயன்படுத்தி மீனவர்கள் பயனடைய வேண்டும் - இஸ்ரோ இயக்குநர் பாண்டியன்
Published on
ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா போல விண்வெளியில் சாதனை நிகழ்த்த வரவேண்டும் என மாணவர்களிடையே பேசிய இஸ்ரோ இயக்குநர் பாண்டியன் தெரிவித்துள்ளார். திருப்போரூர் அடுத்த தாழம்பூரில் உள்ள தனியார் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு இதுவரை ஆயிரக்கணக்கான பொறியியல் படித்த மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்தார். எல்லைத் தாண்டாமல் பாதுகாப்பாக, அதிக மீன்வளத்தை பெறும் வகையில் இஸ்ரோ உருவாக்கியுள்ள செயலியை பயன்படுத்தி மீனவர்கள் பலனடைய முன்வர வேண்டும் என்றும் பாண்டியன் கேட்டுக் கொண்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com