மீனுக்கு விரித்த வலை - சிக்கியதை பார்த்து அதிர்ந்த மீனவர்
மீன் வலையில் சிக்கிய 150 கிலோ ராட்சத ஆமை - கடலுக்குள் விடுவிப்பு
தஞ்சையில் மீனவரின் வலையில் சிக்கிய 150 கிலோ கடல் ஆமையானது, பாதுகாப்பாக மீண்டும் கடலிற்குள் விடப்பட்டது. பட்டுக்கோட்டை அருகே உள்ள மனோரா கடல் பகுதியில் மீனவர் கல்யாணகுமார் என்பவர் மீன் பிடிக்க வலையை வீசிவிட்டு காத்திருந்தார். அவரது வலையில், 150 கிலோ எடை உள்ள ராட்சத ஆமை சிக்கியது. இதையடுத்து, அவர் வன அலுவலர்களின் அறிவுரைப்படி ராட்சத ஆமையை மீண்டும் கடலில் விட்டார். அவரின் இந்த செயலை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Next Story
