ஆளில்லா மெட்ரோ ரயில் இயக்க முதற்கட்ட திட்டம் - மத்திய ரயில்வே குழுவிற்கு அழைப்பு
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத்தில் டிசம்பர் மாதம் பூந்தமல்லி - போரூர் இடையே சுமார் 9 கிலோ மீட்டர் நீளத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் முதற்கட்டமாக இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே, இதற்கான 3 கட்ட சோதனை ஓட்டங்கள் முடிந்துள்ளன. இந்த நிலையில், வரும் ஜூலை 3வது வாரத்தில் ரயில்வே ஆய்வு அமைப்பான R.D.S.O நிபுணர்கள் வந்து பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வு செய்ய சென்னை மெட்ரோ நிறுவனம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு பிறகு ரயில்வே வாரியம் மற்றும் ஆணையரின் அனுமதி கிடைத்த பின்னர் தான் பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்..
Next Story
