

அரசு மணல் குவாரிகளில் ஆன்லைனில் பதிவு செய்யும் பொது மக்களுக்கு முதலில் மணலை விற்பனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக பட்டுக்கோட்டையை சேர்ந்த தங்கவேல் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,இடைத்தரகர்கள் 40 ஆயிரம் ரூபாய்க்கு மணலை விற்பனை செய்வதாக கூறியுள்ளார். அரசாங்கத்திடம் 6 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மண்ணைப் பெற்று, கொள்ளை லாபத்திற்கு அப்பாவி பொதுமக்களிடம் விற்பனை செய்வதாக கூறியுள்ளார். அனைத்து பொதுமக்களும் ஆன்லைன் வழியில் புக்கிங் செய்து நியாயமான விலைக்கு மண் கிடைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் ,ஆனந்தி அமர்வு,
ஆன்லைனில் பதிவு செய்யும் பொது மக்களுக்கு முதலில் மணலை விற்பனை செய்ய வேண்டும் எனஉத்தரவிட்டனர். மீதமுள்ள மணலை லாரி உரிமையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்..