குடோனில் ஆய்வு செய்தபோது பயங்கரம்.. திடீரென வெடித்துச் சிதறிய பட்டாசுகள்.. - 3 அரசு அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி

குடோனில் ஆய்வு செய்தபோது பயங்கரம்.. திடீரென வெடித்துச் சிதறிய பட்டாசுகள்.. - 3 அரசு அதிகாரிகளுக்கு நேர்ந்த கதி
Published on

ஒசூர் அருகே, பட்டாசு குடோனை ஆய்வு செய்தபோது, எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்த விபத்தில், அதிகாரிகள் படுகாயமடைந்தனர்.

ஓசூர் அருகே ஜே.காரப்பள்ளி கிராமத்தில் உள்ள சபு புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, குடோனில் இருந்த பட்டாசு திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், ஒசூர் நிலவரித் திட்ட சிறப்பு டிஆர்ஓ பாலாஜி, நிலவரித் திட்ட சிறப்பு தாசில்தார் முத்துப்பாண்டி, தேன்கனிக்கோட்டை தாசில்தார் சரவணகுமார் மற்றும் குடோன் மேனேஜர் சீமான் ஆகியோர் படுகாயமடைந்தனர். அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் சரயு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் ஆகியோர், ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com