Firecrackers | பட்டாசால் பஸ்பமான ஜவுளிக்கடை, மெடிக்கல்.. தீபாவளியில் ஓனர்களுக்கு பெரும் வலி
Firecrackers | பட்டாசால் பஸ்பமான ஜவுளிக்கடை, மெடிக்கல்.. தீபாவளியில் ஓனர்களுக்கு பெரும் வலி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே மர்ம நபர்கள் பட்டாசு வெடித்ததில், துணிக்கடை மற்றும் மருந்தகத்தில் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. பெருமுளை சாலையில் உள்ள துணிக்கடையில் முதலில் பற்றிய தீ, அருகிலிருந்த மருந்தகத்திற்கும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனர். அருகில் உணவகத்தில் சமையல் சிலிண்டர்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, தீ விபத்துக்குக் காரணமானதாகக் கூறப்படும் 4 பேர் மற்றொரு கடையில் பதுங்கியிருந்த நிலையில், அவர்களை தவெக தொண்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
