ஆட்டுக் கிடைக்குள் பரவிய தீ - 17ஆட்டுக்குட்டிகள் தீயில் கருகி பலி
பெரம்பலூரில் காய்ந்து போன சோளப்பயிர்களை தீ வைத்து எரித்த போது, ஆட்டுப் பட்டியில் அடைத்து வைக்கப்பட்ட 17 ஆட்டுக் குட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தன. குன்னம் அருகே மருவத்தூர் கிராமத்தில் ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த தவசி என்பவர், சங்கர் என்பவரின் காட்டில், 217 செம்மறி ஆடுகளுடன் ஆட்டுப் பட்டி அமைத்திருந்தார். இந்த சூழலில், அந்த பகுதியில் காய்ந்த சோளப் பயிர்களை தீவைத்து எரித்தபோது, மளமளவென பரவிய தீயில், இவரது ஆட்டுப் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 17 ஆட்டுக் குட்டிகள் எரிந்து, துடிதுடித்து உயிரிழந்தன. இந்த சம்பவத்தில் உயிரிழந்த குட்டிகள் பிறந்து 2 வார காலமே ஆனவை என கூறப்படுகிறது. இது குறித்து, அதிகாரிகள் உரிய விசாரணை செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என ஆடுகளின் உரிமையாளர் தவசி கோரிக்கை வைத்துள்ளார்.
Next Story
