Cuddalore | ஓடும் அரசு பேருந்து டயரில் பற்றிய தீ - டிரைவர் செயலால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து

x

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தின் பின்பக்க டயர் தீப்பற்றியதால் பேருந்து பாதி வழியில் நிறுத்தப்பட்டது. சிதம்பரத்திலிருந்து குறிஞ்சிப்பாடிக்கு சென்று கொண்டிருந்தபோது, டயர் சூடாகி புகை வந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். டயரும் டியூப்பும் தேய்மானத்தால் சூடேறி புகைந்தது தெரிய வந்தது. இதனால், முன்னெச்சரிக்கையாக பேருந்து நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனிடையே, பயணிகள் நீண்ட நேரமாக அவதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்