Cuddalore | குப்பை கிடங்கில் தீ விபத்து - 3-வது நாளாக அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள்
குப்பை கிடங்கில் தீ விபத்து - 3-வது நாளாக அணைக்க போராடும் தீயணைப்பு வீரர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை அணைக்கும் பணி மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஓமக்குளம் பகுதியில் 4.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கில், சிதம்பரம் நகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமூக விரோதிகள் சிலர் தீ வைத்ததாக கூறப்படும் நிலையில், குப்பை கிடங்கு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அருகில் உள்ள சிவசக்தி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் புகைமூட்டம் சூழ்ந்து, குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புகைமூட்டம் குறைந்து வருவதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
