மாட்டு தொழுவத்தில் தீ விபத்து - 6 பசு மாடுகள் கருகி பலி
நீலகிரியில் மாட்டுத்தொழுவத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சூர் அருகே குந்தாபாலத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். அவரிடம் 6 பசு மாடுகள் இருந்த நிலையில், குந்தா அணை ஒட்டிய தனது மாட்டு தொழுவத்தில் கட்டி வைத்துள்ளார்.
மின் இணைப்பு இல்லாத நிலையிலும் நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க முயன்றும் முடியாததால், 6 பசுமாடுகளும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து மஞ்சூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
