Fire Accident | புதுக்கோட்டையில் பற்றி எரியும் குப்பை கிடங்கு - பரபரப்பு காட்சிகள்

x

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னமராவதி பகுதியில், ஊரின் மையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு அமைந்துள்ளது. இந்த நிலையில் திடீரென அங்கு தீப்பற்றி எரியத் தொடங்கி, புகை மண்டலமாக காட்சி அளிக்கத் தொடங்கியது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்