Fire Accident | Crackers | தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - சுவரை உடைத்து பெண் மீட்பு

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - சுவரை உடைத்து பெண் மீட்பு

Fire Accident | Crackers | தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து - சுவரை உடைத்து பெண் மீட்பு வேலூர் மாவட்டம் காத்தாடிகுப்பம் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், உள்ளே சிக்கிய பெண் தொழிலாளர் சுவற்றை உடைத்து மீட்கப்பட்டுள்ளார். முதலில் அந்த காட்சிகளை பார்க்கலாம்.... சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலையில் சுமார்10 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலை முழுவதும் புகை சூழ்ந்த நிலையில், தொழிலாளர்கள் அலறியடித்து வெளியேறினர். பெண் தொழிலாளி ஒருவர் உள்ளே சிக்கிக் கொண்ட நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் சுவரை உடைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com