Fire Accident | நடுரோட்டில் குபுகுபுவென எரிந்து நாசமான கண்டெய்னர் லாரி - முக்கிய பார்சல்கள் சேதம்
Fire Accident | Nellai | நடுரோட்டில் குபுகுபுவென எரிந்து நாசமான கண்டெய்னர் லாரி - முக்கிய பார்சல்கள் சேதம்
நெல்லைக்கு கொரியர் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரியில் தீ விபத்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் அருகே உள்ள நஞ்சியம்பாளையம் ஆற்றுப் பாலம் அருகே கோவையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த கொரியர் லாரியின் முன்பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை அறிந்த ஓட்டுநர் சாமர்த்தியமாக கண்டெய்னர் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு லாரியில் இருந்த பேட்டரியை துண்டித்தார். அதற்குள் முன் பக்கம் தி பிடித்து எரிந்து முன் பக்கம் முழுவதும் எரிந்து சேதமானது. இதனை அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர் இருப்பினும் லாரியின் முன்பக்கம் முழுவதும் தீயில் எரிந்து சேதமானது.
