Chennai Thermal Plant | சென்னை அனல்மின் நிலைய சேமிப்பு கிடங்கில் பயங்கரம்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தின், நிலக்கரி சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் நிலக்கரி கிடங்கு முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து, கரும்புகை சூழ்ந்துள்ளது. தகவல் அறிந்து10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களுடன் வந்த வீரர்கள் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். நிலக்கரியில் தொடர்ந்து தீ பரவி எரிவதால், தீயை முழுமையாக கட்டுப்படுத்த இரண்டு நாட்கள் வரை ஆகலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com