Fire Accident | கடை, பைக்குகளை தீ வைத்து கொளுத்திய இளைஞர்.. உள்ளே சிக்கி கதறிய 12 பேர்
இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த கஞ்சா போதை இளைஞர்
வாணியம்பாடியில், கஞ்சா போதை இளைஞர், இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கொல்லத் தெரு பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர், தனது சகோதரருடன் ஒரே வீட்டில் வசிப்பதுடன், வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த ஜபியுல்லா என்பவர், சில தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில் அப்பகுதியில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கர் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த ஜபியுல்லா, நள்ளிரவில் சங்கர் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
தீ வேகமாக பரவியதால் வீட்டிற்குள் தூங்கிக்கொண்டிருந்த 12 பேர் வெளியே வர முடியாமல் தவித்த நிலையில், பின்னர் சுதாரித்துக் கொண்டு பத்திரமாக வெளியேறினர். இந்த சம்பவத்தில் 3 இருசக்கர வாகனங்கள், மளிகை கடையில் இருந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கஞ்சா போதையில் தீ வைத்து தப்பியோடிய ஜபியுல்லாவை தேடி வருகின்றனர்.
