"ரூ.10,000 வரை அபராதம்" - நெல்லை மக்களே உஷார்
"ரூ.10,000 வரை அபராதம்" - நெல்லை மக்களே உஷார்
நெல்லை தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பவர்கள் மீது 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திரா தெரிவித்துள்ளார்.
நெல்லை சந்திப்பு தைப்பூசம் மண்டபம் அருகே தாமிரபரணி நதிக்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு, ஆணையாளர் சுகபுத்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். பிளாஸ்டிக் கழிவுகளை தன்னார்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து அகற்றினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திரா, நெல்லை மாநகராட்சி பகுதிகளில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றால் தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பது பெருமளவு குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.
Next Story
