பிப்ரவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - சத்யபிரதா சாஹு

பிப்ரவரி 2-வது வாரம் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
பிப்ரவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - சத்யபிரதா சாஹு
Published on
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் 25 இடங்களில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு, வாக்காளர்கள் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்தார். மேலும் இன்றும், நாளையும் 2 வாக்காளர் பெயர் சேர்ப்பு, திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நடைபெறுவதாகவும், பிப்ரவரி 2-வது வாரம் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com