பேக்கரியில் ரவா லட்டுக்கு சைட் டிஷ் கேட்டு சண்டை
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் திருச்சி செல்லும் சாலையில் கேரளாவைச் சேர்ந்த ஜம்ஜித் என்பவர் டீ கடை மற்றும். பேக்கரி கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் கேரளாவை சேர்ந்த 4 பேர் வேலை செய்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று இரவு நான்கு வாலிபர்கள் கடைக்கு வந்து ரவா லட்டு கேட்டு வாங்கி கொண்டு அதற்கு சைடீஷ் கொடுக்குமாறு கடை ஊழியரிடம் கேட்டு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் சைடிஸ் கொடுக்காத கடை ஊழியர்களை அங்கிருந்த சேர் சமையலுக்கு பயன்படுத்தும் இரும்பு கரண்டியை கொண்டு கடுமையாக தாக்கி உள்ளனர் இதில் பலத்த காயமடைந்த கடை ஊழியர்கள் மூன்று பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர், மேலும் இது சம்பவம் குறித்து சிசிடிவி கேமரா பதிவை கொண்டு விருத்தாச்சலம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் நான்கு குண்டர்கள் கடை ஊழியர்களை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்கள் பரவி பெரும் பரபரப்பை ஏற்பட்டு வருகிறது.
