வாகன நிறுத்த கட்டண வசூலில் வாக்குவாதம் - இருதரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு சென்ற தினேஷ்குமார் என்பவரும் அவரது மனைவியும் வாகன நிறுத்த ஊழியர்களால் தாக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
வாகன நிறுத்த கட்டண வசூலில் வாக்குவாதம் - இருதரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை
Published on

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு சென்ற தினேஷ்குமார் என்பவரும் அவரது மனைவியும் வாகன நிறுத்த ஊழியர்களால் தாக்கப்பட்ட காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கொடிவேரி ஊராட்சி சார்பில் இரு சக்கர வாகனத்திற்க்கு வசூலிக்கபடும் கட்டணத்திற்கு முறையாக ரசீது வழங்கவில்லை என தினேஷ்குமார் கேட்டதாகவும், இது தொடர்பான வாக்குவாதத்தில் வாகன நிறுத்த ஊழியர்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் கொடிவேரி ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் உள்ளிட்டோர் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com