செய்துங்கநல்லூர் காவல்நிலையத்திற்கு சென்ற ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஆய்வாளர் ரகுராஜன் பணியில் இல்லை என அலுவலக குறிப்பேட்டில் எழுதியுள்ளார். மேலும், வாக்கி டாக்கியில் ஆய்வாளர் ரகுராஜனை அழைத்து, கடுமையான வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆய்வாளர் ரகுராஜன் அலுவலக பொது குறிப்பேட்டில், டி.எஸ்.பி சுரேஷ்குமார், தனது மாமியாரின் நெருங்கிய சித்தப்பா மகன் என்றும் குடும்ப பகை காரணமாக, தனிப்பட்ட முறையில் தம்மை தகாத வார்த்தையால் திட்டி அவமானப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற செல்வதாக பொதுகுறிப்பேட்டில் அவர் எழுதி வைத்துள்ளார். டி.எஸ்.பி சுரேஷ்குமார், ஆய்வாளர் ரகுராஜன் இடையிலான இந்த மோதல், காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.