சிபிஎம் - திமுக உறுப்பினர்கள் இடையே பயங்கர வாக்குவாதம்.. பரபரப்பு காட்சி

x

மாமன்ற கூட்டம் - சிபிஎம் - திமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம்

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. மதுரை 41வது மாமன்ற கூட்டமானது, மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. இந்த நிலையில் கூட்டத்தில் பேசிய, திமுக மாமன்ற உறுப்பினர் ஜெயராமன், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரைக்கு எந்த நிதி உதவிகளையும் பெற்றுத் தரவில்லை எனவும், மாநகராட்சி குறித்த அவரது பேச்சிற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்