சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை ஜூலை 16 ம் தேதிக்கு ஒத்தி வைப்பு

சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை ஜூலை 16 ம் தேதிக்கு ஒத்தி வைத்து எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை ஜூலை 16 ம் தேதிக்கு ஒத்தி வைப்பு
Published on

இந்த வழக்கு இன்று எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவு நகல் சசிகலா தரப்பு வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, சசிகலாவிடம் கேள்விகள் கேட்க ஏதுவாக வழக்கின் ஆவணங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்காக வழக்கு விசாரணை ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினமே, சசிகலா வீடியோ கான்பரன்சிங் வாயிலாகவும், பாஸ்கரன் நேரிலும் ஆஜராவதற்கான தேதி முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com